உலகை அச்சுறுத்தி கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் 14 லட்சம் முதல் 29 லட்சம் கொரோனாவின் பாதிப்புகளையும் மற்றும் 37 ஆயிரம் முதல் 68 ஆயிரம் வரை பலி எண்ணிக்கையும் இந்தியா தடுத்துள்ளது என கொரோனா வைரஸுக்காக உருவாக்கப்பட்ட பணிக்குழுக்களில் அதிகாரம் பெற்ற குழுவின் தலைவர் வி.கே.பால் கூறியுள்ளார்.
இதனை பற்றி அவர் கூறியது: கொரோனா வைரஸ் காரணத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத உத்தரவு கொரோனாவிற்கு ஒரு தடையாக இருந்தது. இதனால் இறப்பு விகிதம் கணிசமாக குறைந்து உள்ளது. ஊரடங்கு உத்தரவை செய்யப்படுத்தாமலும் மற்றும் தாமதப்படுத்தி இருந்தாலும் பாதிப்பு எண்ணிக்கையும் மற்றும் எண்ணிக்கையும் அதிகரித்து இருந்திருக்கலாம். மேலும் இதனால் 14 லட்சம் முதல் 20 லட்சம் வரை கொரோனா பாதிப்புகளையும் மற்றும் 37 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை உறுப்புகளையும் தடுத்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் போன்ற ஐந்து மாநிலங்களில் தான் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் மற்ற மாநிலங்களில் பெரும் பாதிப்பு இல்லாமல் குறைவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source; https://www.dinamalar.com/news_detail.asp?id=2544163
from Kathir News | Tamil news and views platform https://ift.tt/2AUw2cZ
via One India Tamil News
0 Comments