Fact Check : தனியார் நிறுவனத்திடமிருந்து 5,000 வென்டிலேட்டர்களை மோடி அரசு வாங்குகிறது என்று போலி செய்தியை வெளியிட்ட 'தி வயர்' செய்தித்தளம்..!

"அகமதாபாத் வென்டிலேட்டர் சர்ச்சையில், பா.ஜ.க. தலைவர்கள் தொடர்புகளின் பின்னணி", என்ற தலைப்பில் செய்தி ஒன்றை தி வயர்' என்ற செய்தித்தளம் வெளியிட்டது. ராஜ்கோட்டை சார்ந்த நிறுவனத்திடமிருந்து 5,000 வென்டிலேட்டர்களை நரேந்திர மோடி அரசு வாங்குகிறது என்று அந்த செய்தியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அந்த நிறுவனத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் விளம்பரதாரர்கள் பா.ஜ.க. தலைவர்களுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. 

பி.எம். கேர்ஸ் வழங்கிய நிதி மூலம் இந்த வெண்டிலேட்டர்களை வாங்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கக் கூடும் எனவும், இந்த மாத தொடக்கத்தில் இந்த வெண்டிலேட்டர்களை வாங்குவதற்கு சுமார் ரூ 2,000 கோடி செலவாகியிருக்கலாம் என்றும் அந்த செய்தி கூறியிருந்தது. 



எனினும் இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளது P.I.B.FactChek எனப்படும் பத்திரிக்கை தகவல் மையத்தின் செய்திகள் சரிபார்க்கும் பிரிவு. 

குஜராத் அரசாங்கத்தின் தகவல்படி, அந்த வெண்டிலேட்டர்கள் விலைக்கு வாங்கப்படவில்லை என்றும் அவை நன்கொடையாக வழங்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த வெண்டிலேட்டர்கள் அனைத்தும் சரியான தரத்தில் இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

'தி வயர்' செய்தித்தளம் போலி செய்திகளைப் பகிர்வது இது முதல்முறையல்ல. முன்னதாக, 2017 ஆம் ஆண்டில், ஜெய் ஷாவின் வணிக நடவடிக்கைகள் முறையற்றது என்று குற்றம்சாட்டி 'தி வயர்' செய்தித்தளம் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

இந்த போலி செய்திக்கு பதிலளிக்கும் விதமாக, ஜெய் ஷா 'தி வயர்' மீது அவதூறு வழக்கு தொடர்ந்து 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டார். இதற்கு உச்சநீதிமன்றம் பதிலளிக்கையில், ஜெய் ஷா மீது போலி கதையை வெளியிடுவதற்கான அவசரத்தில் இருந்ததற்காக 'தி வயர்' செய்தித்தளத்தை சாடி 'மஞ்சள் பத்திரிகைக்கு குறைவே இல்லை' என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 




from Kathir News | Tamil news and views platform https://ift.tt/3bWTH9B
via One India Tamil News

Post a Comment

0 Comments