கல்லூரி, பணியிடம், தொழில்முறை சந்திப்புகள் என ஒரு தனி நபர் எங்கெல்லாம் செல்கிறாரோ பயணிக்கிறாரோ அங்கேல்லாம் தன்னை மிகசிறப்பாக வெளிப்படுத்தி கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. நம் குணங்களை, நம் பண்புகளை வெளிப்படுத்தும் முன் நம்மை குறித்த பிம்பத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்துவது நம் தோற்றமும் வெளிப்பாடும் தான். சின்ன சின்ன விஷயங்களில் நாம் செலுத்தும் அக்கறை நம்மை சிறந்த Professionalஆக வெளிப்படுத்தும். நம் பிம்பத்தை சிறப்பாக கட்டமைப்பதற்க்கான சில டிப்ஸ்கள் இங்கே.
அதீத நறுமணம் தரும் திரவியங்கள உபயோகப்படுத்தாதீர்கள்.
கறையில்லாத ஆடைகளையும், உங்களுக்கு மிகச்சரியாக பொருந்தும் ஆடைகளையும் அணியுங்கள்.
மிக அதிகமான முகபூச்சு, அலங்காரங்களை தவிர்த்திடுங்கள். இடத்திற்க்கு பொருந்தாத ஆடைகளை அணியாதீர்கள்.
விரல் நகங்களை சரியாக களைந்து, ஒழுங்குபடுத்தி கொள்ளூங்கள்.
ஆரோக்கியமாக வெளிப்படுங்கள். சிவப்பு நிற கண்கள், இருமல், தும்மல் ஆகியவைகளிலிருந்து விரைவில் வெளியேறுங்கள்.
கேசுவலாக இருப்பதை தவிருங்கள்.... வெளிப்படையாக தெரியும் பகுதிகளில் டேட்டூக்கள் இடுவது, பெரிய வளையங்கள், தேவையற்ற அணிகலன்கள் போன்றவற்றை தவிர்த்திடுங்கள்
நீங்கள் முதன் முறையாக சந்திப்பவர் யாராக இருந்தாலும் எழுந்து நின்று நம்பிக்கையோடு கை குலுக்குங்கள்.
கைகளை குலுக்கும் பொழுது கைகளை ஈரம் இல்லாமல் உலர்வாக வைத்திருங்கள்.
பேசுகிற பொழுதும், பிறர் பேசுவதை கவனிக்கும் பொழுதும் கண்களை நேரே சந்தியுங்கள்.
உங்களுடன் இருக்கும் சக மனிதர்களுடன் அமர்கிற பொழுது போதுமான இடைவெளி விட்டு அமருங்கள்
சந்திப்புகளில், கலந்துரையாடல்களில் மற்ற அனைத்து பொழுதுகளிலும் உங்களோடு இருக்கும் அனைவரையும் அங்கிகரியுங்கள். ஒருவரையும் ஒருபொழுதும் நிராகரிக்காதீர்கள்.
தெரிந்தவர் தெரியாதவர் என அனைவரிடமும் மென்மையான புன்னகையை பகிர்ந்து கொள்ளுங்கள்.
விடைபெறுகையில் அனைவரிடமும் நீங்கள் வெளியேறுவதை தெரிவியுங்கள்.
உட்காருவது நடப்பது உங்களை வெளிப்படுத்தி கொள்வது என அனைத்து அசைவுகளிலும் உங்கள் நம்பிக்கையை, உங்களை குறித்த பெருமையை வெளிப்படுத்துங்கள்.
from Kathir News | Tamil news and views platform https://ift.tt/3bPNV9H
via One India Tamil News
0 Comments